தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கல்லால் அடித்து பெண் கொலை - கணவரை பிடித்து போலீஸ் விசாரணை

ராஜஸ்தானில் கல்லால் அடித்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில், கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்சமாந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் நார்சிங்ராவத். இவரது மனைவி ரேகா தேவி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நார்சிங்ராவத், ரேகா தேவியை கல்லால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து ரேகா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரேகா தேவியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் நார்சிங்ராவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு