தேசிய செய்திகள்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்னும் 200 பயங்கரவாதிகள் நடமாட்டம் பாதுகாப்பு படை தகவல்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்னும் 200 பயங்கரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஊடுருவ செய்து வரும் பாகிஸ்தானின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. பயங்கரவாத செயல்பாட்டை முற்றிலும் முடக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து கிடைக்கும் பயங்கரவாத நிதி இப்போது முடங்கி உள்ளது. பயங்கரவாத நிதியகம் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை கைது செய்து, விசாரித்து வருகிறது.

இதற்கிடையே ராணுவம், மத்திய ரிசர்வ் படைகள் மற்றும் மாநில போலீஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடர்ந்து வருகிறது.

நேற்று காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுப்பது தொடர் சம்பவமாக உள்ளது. ராணுவ படைப்பிரிவு தலைமை அதிகாரி ஜே.எஸ்.சந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இளைஞர்கள் பயங்கரவாத பாதையில் செல்வதை தவிர்க்க கேட்டுக்கொண்டார், இளைஞர்கள் திரும்பவும் அழைப்பு விடுத்து உள்ளார்.

பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டது காஷ்மீர் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு காஷ்மீரில் எண்ணற்ற பயங்கரவாத வேட்டைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 190 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 80 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். 190 பேரில் 66 பேர், ஊடுருவல் முயற்சியின்போது எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கொல்லப்பட்டவர்கள். மீதி 124 பேர், உட்புற பகுதியில் கொல்லப்பட்டது, நிலைமையை பெருமளவு மாற்றி உள்ளது. இன்னும் 200 பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று ஜே.எஸ்.சந்து கூறிஉள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்