புதுடெல்லி,
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சி.இ.ஓ. சாந்தா கோச்சாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா குழு, வங்கியின் விதிமுறைகளை சாந்தா கோச்சார் மீறியதாக தன் விசாரணை முடிவில் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் படி, ஐசிஐசிஐ வங்கி அதன் உள்ளார்ந்த விதிமுறைகளுக்கு இணங்க அவரது ராஜினாமாவை பணி முடிப்பாக எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு சேரவேண்டிய கடந்த கால, எதிர்காலப் பயன்கள் அனைத்தையும் வங்கி முடக்கி உள்ளது.