கொச்சி,
கேரள மாநிலம் கொச்சிக்கு மேற்கே 21 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளிப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மீட்பு பணியை ஆரம்பித்தனர். இந்த மீட்பு பணியில் ஐசிஜி-க்கு சொந்தமான கப்பல் அர்ன்வேஷ் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. விரைவாக நடைபெற்ற மீட்பு பணியில் மீனவர்கள் தத்தளித்த இடம் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கியது இந்திய மீன்படி வாரியத்திற்கு சொந்தமான மீன்பிடி படகு மரியம் என்றும் மீனவர்கள் இந்திய மீன்படி வாரிய பணியாளர்கள் என்றும் தெரியவந்து உள்ளது. ஐசிஜி கப்பல் அர்ன்வேஷின் ஊழியர்களின் முயற்சிகளுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய மரியம் படகு சரிபார்க்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பணியாளர்கள் அனைவரும் மற்றொரு படகிற்கு மாற்றப்பட்டு பத்திரமாக முனம்பம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.