கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பெங்களூரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: கொச்சி விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு

139 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த பெங்களூரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் கொச்சி விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

கொச்சி,

கொச்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 139 பயணிகளுடன் நேற்று காலை 10.30 மணிக்கு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக விமானத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமானம் தொலைதூர பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விமானத்தை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனையிட்டனர். அத்துடன் பயணிகளின் உடைமைகளும் பரிசோதிக்கப்பட்டன. இதில் சந்தேகப்படும் வகையிலான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதன்மூலம் இது வெறும் புரளி என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விமானம் பிற்பகல் 2.24 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு சென்றது. அத்துடன் இது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு