தேசிய செய்திகள்

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி; பல இடங்களில் முன்னிலை

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 7ல் வெற்றியும், 108ல் முன்னிலையும் பெற்றுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்து முடிந்தது. இதில் 63% ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அதன் முடிவுகளை மேற்கு வங்காள தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு வருகிறது.

இதன்படி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர, 108 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. பா.ஜ.க. 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தம் 144 இடங்களை கொண்ட கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் 133 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெறும் நோக்கில் அக்கட்சி உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை