கொல்கத்தா
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அந்த பள்ளியின் நடன ஆசிரியர் ஒருவர் 2 -வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். சிறுமியை ஆசிரியர் இதனை வெளியே கூறக்கூடாது என மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று காலை வெளியில் தெரிய வந்து உள்ளது. இதை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பெற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பள்ளியின் ஆசிரியரை கைது செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.