தேசிய செய்திகள்

இந்திய மருத்துவ சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து சந்தீப் கோஷ் சஸ்பெண்ட்

சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய மருத்துவ சங்கம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ.(மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்