தேசிய செய்திகள்

மேற்கு வங்காள போலீஸ் கமிஷ்னர் வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் செல்வதை போலீஸ் தடுத்தது

மேற்கு வங்காள போலீஸ் கமிஷ்னரின் வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் செல்வதை அம்மாநில போலீஸ் தடுத்து நிறுத்தியது.

கொல்கத்தா,

சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. ஆனால், அவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது. முறைகேடு தெடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக மம்தாவிடம் கேள்வி எழுப்பிய போது, என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் போலீஸ் கமிஷ்னரின் வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் செல்வதை அம்மாநில போலீஸ் தடுத்து நிறுத்தியது என செய்தி வெளியாகியுள்ளது.

போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமாரை தேடிவரும் சிபிஐ அதிகாரிகள் இன்று தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவருடைய வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்தார்கள். அப்போது அம்மாநில போலீஸ் தடுத்து நிறுத்தியுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடையே ராஜீவ் குமாரை மூன்று நாட்களாக சிபிஐ தேடிவருகிறது, அவரைக் காணவில்லை என்று வெளியாகிய தகவலை போலீஸ் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக மீடியாக்களில் வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றது என தெரிவித்துள்ளன. கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஜாவித் சாமிம் வெளியிட்ட அறிக்கையில் பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடைய வீட்டிற்கு சிபிஐ சென்றுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்