தேசிய செய்திகள்

இந்தியாவின் 72-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் கொல்கத்தாவின் மித்ரபா குஹா

கொல்கத்தாவைச் சேர்ந்த மித்ரபா குஹா இந்தியாவின் 72-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

செர்பியா,

செஸ் போட்டிகளில் "கிராண்ட் மாஸ்டர் " பட்டம் உயரிய ஒன்றாக கருதப்படுகிறது. இதை அடைய ஒரு வீரர் 2500 எலோ புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெறவேண்டும் . இந்தியாவின் மித்ரபா குஹா செர்பியாவில் நடைபெற்ற செஸ் தொடரில் 2500 புள்ளிகளை அடைந்ததன் மூலம் 72-வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.

72-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மித்ரபா குஹாவிற்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்தது. மேலும் முன்னாள் உலக சாம்பியனும், செஸ் ஜாம்பவானுமான விஸ்வநாதன் ஆனந்தும் குஹாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த மாதம் இந்தியாவின் 70- வது செஸ் கிராண்ட்மாஸ்டர் எனும் பெருமையை தெலுங்கானாவின் ராஜா ரித்விக்கும், 71- வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை சங்கல்ப் குப்தாவும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு