தேசிய செய்திகள்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு

நடந்து முடிந்த நீட் தேர்வில் அந்த மாணவி கலந்து கொண்டு தேர்வெழுதி இருந்தார்.

தினத்தந்தி

கோட்டா,

ராஜஸ்தானை சேர்ந்தவர் பகிஷா (வயது 18). கோட்டாவில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்திருந்தார். அதே பகுதியில் தனது அம்மா மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து தங்கியவாறு பயிற்சி மையத்திற்கு சென்று வந்துள்ளார். மேலும் நடந்து முடிந்த நீட் தேர்வில் அவர் கலந்து கொண்டு தேர்வெழுதி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. அதில் குறைவான மதிப்பெண்களே பகிஷா எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பகிஷா அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டாவில் இந்தாண்டு இதுவரை போட்டி தேர்வுக்களுக்கு பயிற்சி பெற்று தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்