தேசிய செய்திகள்

டையுவில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டையுவில் புதிய திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

டையு,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 4 நாள் பயணமாக யூனியன் பிரதேசங்களான டையு, டாமன், தத்ரா மற்றும் நாகர் ஹவேலிக்கு சென்றிருக்கிறார். அதில் 2-வது நாளான நேற்று, டையுவில் பல மேம்பாட்டுத் திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.

கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகவும், தூய்மையைப் பராமரிப்பதற்காகவும் டையு யூனியன் பிரதேச நிர்வாகத்தை ஜனாதிபதி கோவிந்த் பாராட்டினார்.

நிர்வாகத்தின் முயற்சி, மக்களின் பங்கேற்பால்தான், கடந்த 2019-ம் ஆண்டு தூய்மை கணக்கெடுப்பில் டாமனும் டையுவும் முதலிடம் பெற்றதாக அவர் கூறினார்.

1961-ம் ஆண்டு டையுவை போர்ச்சுக்கீசிய ஆட்சியில் இருந்து விடுவிப்பதற்காக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேசன் விஜய் நடவடிக்கையையும் குறிப்பிட்டு ஜனாதிபதி புகழ்ந்தார். டையுவின் வரலாறு முழுவதும் வீரமும், தீரமும், தேசப்பற்றும் மிகுந்த சம்பவங்கள் நிறைந்திருக்கின்றன என்றார் அவர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை