தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்தில் காயம்: மேலும் 74 பயணிகள் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’

கோழிக்கோடு விமான விபத்தில் காயமடைந்த மேலும் 74 பயணிகள் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் 6 விமானிகள் உள்பட 190 பேருடன் கடந்த 7-ந் தேதி இரவு தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாகி 2 துண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பயணிகள் கோழிக்கோடு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து மத்திய விமானப்போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங், விமான விபத்தில் காயம் அடைந்த 149 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் உடல்நலம் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை