தேசிய செய்திகள்

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கொய்னா அணையில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் ஏற்கனவே, கன மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர்புகுந்து விளைப்பயிர்கள் நாசமாகி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இதனால் கொய்னா அணைக்கு வினாடிக்கு 10 ஆயரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த நீர் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் பாய்ந்தோடி வருகிறது. இதனால் இந்த ஆற்றில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. குறிப்பாக சிக்கோடி தாலுகாவில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.

கொய்னா அணை முழுகொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால்அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணா ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பெலகாவி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து