தேசிய செய்திகள்

சிக்கமகளூருவில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

சிக்கமகளூரு அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனியை சோந்தவர் குமா (வயது 50).தாழிலாளி. இவர் சக்கராயப்பட்டணா கிராமத்தில் உள்ள கென்சராயர் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

சக்கராயப்பட்டணா கிராமத்தில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமார் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு சக்கராயப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT