தேசிய செய்திகள்

லடாக் மோதல் விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி மீண்டும் தாக்கு

லடாக் மோதல் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

லடாக் எல்லையில் இந்திய-சீன படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தொடர்ந்து குறை கூறி வருகிறார். இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதாக அவரும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் கூறும் குற்றச்சாட்டை மத்திய அரசு ஏற்கனவே மறுத்து உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை தாக்கும் வகையில் ராகுல் காந்தி நேற்று இந்தியில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புனிதமான இந்திய தாய் மண்ணை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இதுதான் பிரதமர் மோடியின் ஆட்சியில் நடந்து உள்ளது என்று கூறி இருக்கிறார்.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியதாக அரசு தவறான தகவலை தெரிவிப்பதாகவும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இந்தியா படைகளை விலக்கியது நமக்கு பாதகமானது என்றும் பத்திரிகையில் பாதுகாப்பு துறை நிபுணர் ஒருவர் எழுதியுள்ள கட்டுரையையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் இணைத்து உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு