தேசிய செய்திகள்

மத்திய மந்திரி மகனுக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல்; உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு

நீதிபதி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் கடந்த 3-ந்தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தில் காரைக்கொண்டு மோதி 2 பேர் கொல்லப்பட்டதால் வன்முறை வெடித்தது. இதில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு கடந்த 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை போலீஸ் காவல் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரிடம் மேலும் விசாரணை நடத்த காவலில் எடுக்க அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் லகிம்பூர் கேரி தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி சிந்தா ராம், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல் வழங்கி நேற்று உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை ஆஷிஷ் மிஸ்ராவிடம் போலீஸ் காவலில் விசாரணை நடந்து வருகிறது. அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் 3 பேருக்கும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்