தேசிய செய்திகள்

வருமான வரி சோதனையில் லலித் ஓட்டல் குழுமத்துக்கு ரூ.1,000 கோடி வெளிநாட்டு சொத்து கண்டுபிடிப்பு

வருமான வரி சோதனையில் லலித் ஓட்டல் குழுமத்துக்கு ரூ.1,000 கோடி வெளிநாட்டு சொத்து கண்டுபிடிக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாரத் ஓட்டல் குழுமம், நாடு முழுவதும், லலித் ஓட்டல்ஸ் என்ற பெயரில் சொகுசு ஓட்டல்களை நடத்தி வருகிறது. மறைந்த லலித் சூரி நிறுவிய இந்த ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

அதில், இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புடைய கணக்கில் காட்டப்படாத அசையா சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் பெருமளவு கருப்பு பணம் பதுக்கி இருப்பதும் தெரிய வந்தது.

உள்நாட்டில், ரூ.35 கோடி வரிஏய்ப்பு, 25 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துகள் கண்டறியப்பட்டது. இதனால், பாரத் ஓட்டல் குழுமம் மீது கருப்பு பண சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை