பட்னா
நிதி பரிமாற்றம் வழக்கில் ஒரு முக்கிய குற்றவாளியின் மரணத்தை அடுத்து இருவரும் நிதிஷ் அரசினை கடுமையாக விமர்சித்துள்ளனர். லாலு தனது ட்வீட்டர் கணக்கில் ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. தற்போது இறந்துள்ளவர் பாகல்பூர் பகுதியில் நிதிஷ் குமாரின் கட்சியின் செல்வமிக்க தலைவரின் தந்தையாவார்.
அதே போல தேஜஸ்வி யாதவ்வும் தனது டிவீட்டர் கணக்கில் நிதிஷ் அரசை கடுமையாக சாடியுள்ளார். நேற்றிரவு ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர், சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்துள்ளார். இந்த ஸ்ரீஜன் ஊழல் வழக்கு வியாபம் ஊழலை விட பரந்து விரிந்தது என்றார்.
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் கணக்கில் பேரளவு பணம் போடப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டப் பிறகு லாலுவும், ஷரத் யாதவும் நிதிஷ்சை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.