தேசிய செய்திகள்

ஆதார்-பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

ஆதார்-பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆதார் எண்ணுடன் பான்கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மற்றும் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகிய இரண்டும் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

2018-19 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகசாம் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆதார்-பான்கார்டு எண்களை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து