தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் சிறு தொழில் நிறுவனங்களுக்காக ஆன்லைன் பக்கம் தொடக்கம் - தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் தகவல்

கர்நாடகத்தில் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

உலக சிறு தொழில்கள் தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் காணொலி மூலம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;-

இந்திய பொருளாதார வளர்ச்சியில் சிறு தொழில்கள் முக்கிய பங்காற்றுகிறது. கர்நாடக அரசின் புதிய தொழிற்கொள்கையில் சிறு தொழில்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் தொழில் வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. சிறு தொழில் நிறுவனங்களுக்காக தனியாக ஒரு ஆன்லைன் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சிறு தொழில்கள் தங்களுக்கு தேவையான மூல பொருட்களை அதன் மூலம் கொள்முதல் செய்ய முடியும். உரிய பயிற்சி பெற்ற ஊழியர்களையும் நியமனம் செய்து கொள்ளவும் அதில் வசதி செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், அதனை நடத்தும் அதிபர்களின் வாழ்க்கையில் கணக்கு தணிக்கையாளர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். சிறு தொழில்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கணக்கு தணிக்கையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஜெகதீஷ்ஷெட்டர் பேசினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை