தேசிய செய்திகள்

சுப்ரீம்கோர்ட்டு வழக்கு விசாரணையில், கட்டிலில் படுத்தபடி ஆஜரான வக்கீல்-நீதிபதி கடும் கண்டனம்

காணொலி காட்சி மூலம் நடந்த வழக்கு விசாரணையில் கட்டிலில் படுத்தபடி வக்கீல் ஆஜரானதால் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,


கொரோனா பரவல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நடத்திய காணொலி காட்சி அமர்வு ஒன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வக்கீல் ஒருவர் டி-சர்ட் அணிந்தவாறு கட்டிலில் சாய்ந்து படுத்து கொண்டு வாதாடினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி எஸ்.ரவீந்திர பட், நாம் இப்போது மிகவும் கடுமையான காலகட்டத்தை கடந்து வருகிறோம். இந்தநிலையில் காணொலி அமர்வுகள் தவிர்க்கமுடியாத அம்சமாகி உள்ளது. இந்த நிலையில் இந்த அமர்வுகளில் ஆஜராகும்போது குறைந்தபட்ச கோர்ட்டு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடும்கண்டனம் தெரிவித்தார்.

உடனே வக்கீல் மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தொடர்ந்து காணொலி அமர்வில் ஆஜராகும் வக்கீல்கள் அனைவரும் திரையில் சரியான முறையில் உடை, பின்னணியுடன் ஆஜராக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்