தேசிய செய்திகள்

வாஜ்பாய் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த்தினமான இன்று அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96-வது பிறந்த தினம் இன்று நல்ஆளுகை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோரும் வாஜ்பாயின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், வாஜ்பாய் இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார். வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டியெழுப்ப அவர் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்