புதுடெல்லி
நடப்பாண்டான 2017-18 ஆம் ஆண்டிற்கான தேர்தலில் அனைத்து நான்கு மத்தியக்குழு இடங்களையும், 13 கவுன்சிலர் பதவிகளை இடதுசாரி அணி வென்றுள்ளது. முக்கியப் பதவிகளான தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை இடதுசாரி மாணவர் அணி கைப்பற்றியுள்ளது.
மாணவர் சங்கத் தலைவராக கீதா குமாரி வென்றுள்ளார். தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட பாஜக சார்பு மாணவர் அமைப்பின் நிதி திரிபாதியை 464 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மொத்த வாக்குகளான 4,620 இல் பெரும்பான்மையான வாக்குகளை இடதுசாரி மாணவர் சங்கங்கள் வென்றுள்ளன.
வருகின்ற டெல்லி பல்கலைக்கழக தேர்தலிலும் அகில பாரதீய மாணவர் சங்கத்தை இடதுசாரி மாணவர் அணியினர் எதிர்த்துப் போட்டியிடுவார்கள் என்றார் அகில இந்திய மாணவர் பேரவையின் தேசியத் தலைவரான சுச்சேதா டே. இந்த வெற்றி அரசு சகலமான வழிகளிலும் ஜே என் யூவை மூடுவதற்கு வழி செய்து வரும்போது கிடைத்துள்ளது என்றார் அவர்.