புதுடெல்லி,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.
இதன்படி தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்க்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.