தேசிய செய்திகள்

லடாக் சென்றார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா லடாக் யூனியன் பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.

ஜம்மு,

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா லடாக் யூனியன் பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பஞ்சாயத்து நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக நாடாளுமன்ற வெளியீட்டுத் திட்டத்தை அவர் நாளை தொடங்கிவைக்கிறார்.

இந்த திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் லடாக் ஆளுநர் ராதா கிருஷ்ணா மாதூர், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் 195 பேர் நேரடியாக கலந்து கொள்ளவிருப்பதாகவும் மேலும் சுமார் 40 ஆயிரம் பேர் காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியை காணவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.