துமகூரு,
பெங்களூரு, துமகூரு மாவட்டம் உலியாரு தாலுகா கனாதலு கிராமத்தை சேர்ந்தவர் சித்தராமையா. இவர் தனது வளர்ப்பு நாயை வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தார். அப்போது கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது. இதனால் சிறுத்தை நடமாட்டத்தை அறிந்த கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இதுகுறித்து அறிந்த வனத்துறை அதிகாரிகள் சித்தராமையாவின் வீட்டின் அருகில் சிறுத்தையை பிடிக்க இரும்பு கூண்டு வைத்தனர். இதில் நேற்று அதிகாலையில் 2 வயது ஆண் சிறுத்தை ஒன்று சிக்கியது. இதனை வனத்துறை அதிகாரிகள் மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். கிராமத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.