தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம்? வைரல் வீடியோ

சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று ஜனாதிபதி மாளிகைக்குள் சுற்றி வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழா நேற்று நடைபெற்றது. அவருடன் 72 பேர் மத்திய மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் 7 அண்டை நாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், என பல்வேறு தரப்பைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், விழாவின்போது சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று ஜனாதிபதி மாளிகைக்குள் சுற்றி வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டிருந்தபோது, அதன் பின்னணியில் ஒரு விலங்கு நடமாடிக்கொண்டிருந்தது.

மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டிருந்தபோது மாளிகை பின்னால் உள்புறம் சிறுத்தை ஒன்று நடந்து செல்வது போல் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த மர்ம விலங்கு சிறுத்தையா? பூனையா? என்ற சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போது இந்த மர்ம விலங்கு எப்படி வந்து என்றும் அது சிறுத்தையா? இல்லை சாதாரண பூனைதானா? என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை