புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, இந்திய தொல்லியல் துறையின் வருவாயை பெருக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி பிரகலாத் படேல் கூறியதாவது:-
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்களில் ஒலி, ஒளி காட்சிகளின் நேரம் இரவு 9 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதித்தால், இரவு 10 மணிவரை நடத்தலாம்.
தொல்லியல் துறை நினைவு சின்னங்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த ஓராண்டுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. இனிமேல், ஆன்லைன் மூலம் 20 நாட்களில் அனுமதி பெறலாம். படப்பிடிப்பு கட்டணம், ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய சின்னங்களை தவிர, மற்ற இடங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க கட்டணம் கிடையாது என்று அவர் கூறினார்.