தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கோமியத்துக்கு ‘டிமாண்ட்’ அதிகரிப்பு; பாலைவிட அதிகமாக விலை, ரூ.30 க்கு விற்பனை!

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலின் விலையைவிட பசு கோமியத்துக்கு அதிகமான விலை கிடைப்பது மாடு வளர்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தினத்தந்தி

ராஜஸ்தானில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பாலைவிடவும் அதிகமான வருவாயை பசுவின் கோமியம் பெற்று தருகிறது. கோமியம் மத சடங்குகளுக்கும், இயற்கை விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ. 22 மற்றும் ரூ. 25 ஆக உள்ளது. ஆனால் உயர்ராக கிர், தர்பாக்கர் பசுக்களின் கோமியம் லிட்டர் குறைந்தபட்சம் ரூ.15 முதல் ரூ.30 வரை மொத்த சந்தையில் விற்பனையாகிறது.

இப்போது கோமியத்திற்கான டிமாண்ட் அதிகரிப்பு காரணமாக மேலும் விலை உயரலாம் என நம்பப்படுகிறது.

பால் விற்பதைவிடவும், கோமியம் விற்பதால் அதிகம் லாபம் கிடைக்கிறது எனவும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். லாபம் அதிகமாக காணப்பட்டாலும், உரிமையார்கள் கோமியத்தை சிந்தாமலும், சுத்தமாகவும் பிடிக்க விடியவிடிய காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து ரூ. 30 வரையில் கோமியம் வாங்கப்படுகிறது. ஆனால் வெளிமார்க்கெட்டில் அது ரூ. 50 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. ஜெய்பூரை சேர்ந்த பால் வியாபாரி ஓம் பிரகாஷ் மீனா பேசுகையில், நான் ஒரு லிட்டர் பசு கோமியத்தை ரூ. 30 முதல் ரூ. 50 வரையில் விற்பனை செய்கிறேன். இயற்கை விவசாயம் செய்பவர்கள் கோமியத்தை உரமாக பயன்படுத்துகிறார்கள், அவர்கள் வாங்குவதற்கு நாட்டம் கொள்கிறார்கள், என கூறியுள்ளார்.

இயற்கை விவசாயம் செய்பவர்கள் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக பசுவின் கோமியம் சிறந்த மாற்று மருந்தாக உள்ளது என்று பார்க்கிறார்கள்.

உதய்பூர் வேளாண் பல்கலைக்கழகம் அதிகமான அளவு பசு கோமியத்தை வாங்குகிறது. பல்கலைக்கழகத்துக்கு மாதத்துக்கு 500 லிட்டர் பசுவின் கோமியம் உரம் தயாரிக்க தேவைப்படுகிறது. சுற்றுவட்டார விவசாயிகளிடம் இருந்து பசுவின் கோமியத்தை நாள்தோறும் வாங்கி வருகிறது. இதற்கு பல்கலைக்கழகம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையில் செலவு செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்