தேசிய செய்திகள்

மகாவீர் ஜெயந்தியையொட்டி நாமக்கலில் நாளை மதுபான கடைகள் மூடல்

மகாவீர் ஜெயந்தியையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் மதுபான கடைகள் இன்று மூடப்படுகிறது.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை (வியாழக்கிழமை) இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி நாளை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில்அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்