தேசிய செய்திகள்

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

கேரளாவில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை இல்லை.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை), வருகிற 11-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

உள்ளாட்சி தேர்தலையொட்டி, கேரளாவில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை இல்லை. அதேபோல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வாக்குப்பதிவு செய்து விட்டு சற்று தாமதமாக வரலாம் அல்லது வேலை முடிந்து வாக்களிக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.

கேரள அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, 11-ந் தேதி விடுமுறை அளித்து கேரள அரசு அறிவித்து உள்ளது. தனியார் துறை நிறுவனங்கள், ஐ.டி. ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து