தேசிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? -தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.

இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை என கூறப்பட்டது.

இதனையடுத்து, தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என்பதை 2 வார காலத்திற்குள் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்