கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - வழிந்த எண்ணெயை பிடித்துச்சென்ற மக்கள்..!

சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்ற போது விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து வழிந்த எண்ணெயை உள்ளூர் மக்கள் பிடித்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து மும்பைக்கு சமையல் எண்ணெய் கொண்டு சென்ற போது விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து வழிந்த எண்ணெயை உள்ளூர் மக்கள் பிடித்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நேற்று குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து மும்பை நோக்கி 12 ஆயிரம் லிட்டம் சமையல் எண்ணெயுடன் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தவா கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானது.

சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்து சமையல் எண்ணெய் கசிந்தது. இதையறிந்த உள்ளூர் கிராம மக்கள் பாத்திரங்களிலும் கேன்களிலும் எண்ணெயை பிடித்துச் சென்றனர். மக்கள் அதிகமாக கூடியதால் சுமார் 3 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சரிசெய்யவும் முடியாமல் போலீசார் சிரமப்பட்டனர். உள்ளூர் மீட்புக்குழு லாரியை சாலையில் இருந்து அகற்றியதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு