தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் 8-வது நாளாக முடங்கியது பாராளுமன்றம்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியால் 8-வது நாளாக பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டது. #Parliament #LokSabha

தினத்தந்தி

புதுடெல்லி,

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி தொடங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம் என பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் பெரும்பாலான நேரங்களில் முடங்கியே இருந்தது.

மேற்கண்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் அவையை நடத்த ஒத்துழைக்க மறுத்தன. இந்த வாரத்திலும் பாராளுமன்றத்தில் இதே நிலை நீடித்தது. இன்று பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் மேற்கூறிய பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், 8-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே, மக்களவையில் நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால், பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்