தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #LokSabha

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதேபோல், மாநிலங்களவையும் உறுப்பினர்கள் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 12-வது நாளாக பாராளுமன்றம் உறுப்பினர்கள் அமளியால் முடங்கியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு