தேசிய செய்திகள்

காவிரி விவகாரத்தால் கடும் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #CauveryIssue

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு கடந்த மார்ச் 5-ந் தேதி தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கி வருகின்றன.

இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி பிரச்சினையை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்