கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்..? 30-ந்தேதி கூடுகிறது மக்களவை

30-ந்தேதி மக்களவை கூட்டப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

30-ந்தேதி மக்களவை கூட்டப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இதுவரை அதிகாரபூர்வமாக முடித்து வைக்கப்படவில்லை.

இதன் மூலம் 100 நாட்களுக்கு மேலாக கூட்டத்தொடர் முடிவுக்கு வராமல் நீடிப்பது புதிய சாதனையாகியுள்ளது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு 87 நாட்கள் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாமல் இருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

சிறப்புக் கூட்டத்தொடர்

இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது. இந்த நிலையில் வருகிற 30-ந்தேதி மக்களவையும், டிசம்பர் 2-ந்தேதி மாநிலங்களவையும் கூட்டப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அத்தியாவசியமான அரசாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, மக்களவையை 30-ந்தேதி, திங்கட்கிழமையன்றும், மாநிலங்களவையை டிசம்பர் 2-ந்தேதி, புதன்கிழமையன்றும் மீண்டும் கூட்டுமாறு, மக்களவையின் சபாநாயகரையும், மாநிலங்களவையின் தலைவரையும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பணிகளின் அவசரத் தேவைகளைப் பொறுத்து, இரு அவைகளின் அமர்வும் டிசம்பர் 3 அன்று நிறைவடையலாம்" என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்?

இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

SCROLL FOR NEXT