தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்று முழக்கங்களை எழுப்பியதால் இன்று நாடாளுமன்ற மக்களவை அதிர்ந்தது.
தமிழக எம்.பி.க்கள் பலரும் தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, காமராஜர், பெரியார் வாழ்க என முழங்கினர். தேனி அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என கூறியது மாறுபட்டதாக அமைந்தது. கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. பி.ஆர். நடராஜன் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என கோஷமிட்டார். பாரிவேந்தர் தமிழ் வாழ்க, இந்தியா வாழ்க என முழங்கினார். தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்றபோது கரவொலியாலும் சபை கலகலப்பானது. பா.ஜனதாவினர் பாரத மாதாவிற்கு ஜெ என முழக்கமிட்டனர். இதற்கிடையே டுவிட்டரில் தமிழ்வாழ்க என்ற கேஷ்டேக்குடன் வாழ்த்து பதிவை பலர் பதிவிட்டனர். தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டனர். இதனால் உலக அளவில் தமிழ் வாழ்க முழக்கம் என்ற முழக்கம் டிரெண்ட் ஆனது. இந்திய அளவிலும் முதலிடம் பிடித்தது. பலரும் தமிழ் மொழியை பாராட்டியும், பெருமையை விளக்கியும் பதிவிட்டுள்ளனர்.