பெங்களூரு,
கர்நாடகாவில் சித்ரதுர்கா நகரருகே ஜவஹனள்ளி பகுதியில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், சரக்கு லாரி ஒன்று காரின் மீது வேகமுடன் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஆம்பூரை சேர்ந்த 5 தமிழக இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.