மும்பை,
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக வலம் வந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு கடும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கேயல், அவரது மனைவி அனிதா மற்றும் சில விமான நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலர் மீது, கனரா வங்கியில் ரூ.538 கேடி பண மேசடி செய்தது தெடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் நரேஷ் கேயல் மீது அமலாக்கத்துறை பணமேசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தெடர்ந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848.86 கேடி கடனில், ரூ. 538.62 கேடி மேசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்.1 ஆம் தேதி வங்கி மேசடி வழக்கு தொடர்பாக நரேஷ் கேயலை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் தற்பேது மும்பை ஆர்தர் சாலை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணைக்காக நேற்று முன் தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்பேது நரேஷ் கேயல், தனிப்பட்ட முறையில் தன்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேரிக்கை விடுத்தார். நீதிபதி அதற்கு அனுமதி அளித்தார்.
நீதிமன்றத்தின் ஆவணங்கள்படி, நரேஷ் கேயல் கூப்பிய கரங்களுடன் மெத்த உடலும் நடுங்கிய படி தனது உடல் நிலை மிகவும் மேசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் தனது மனைவி அனிதா தீவிர புற்றுநேயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகளும் உடல்நிலை பாதிக்கப்படிருப்பதால், மனைவியை பார்த்துக்கெள்ள முடியவில்லை என்று கண்ணீர மல்கக் கூறினார். தெடர்ந்து தற்பேதுள்ள சூழ்நிலையில் நான் நம்பிக்கை இழந்து விட்டேன், உயிர் வாழ்வதை விட சிறையில் இறப்பதே நல்லது. என்னை ஜெ.ஜெ. மருத்துமனைக்கு அனுப்பாமல் சிறையில் மரணிக்க அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அவரது வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நரேஷ் கேயலின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.