தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் கடும் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

காங்கிரஸ் கட்சியின் கடும் அமளியால் மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்களவையில் இன்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால், ராகுல் காந்தி பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகவும் பாதுகாப்பு மரபுகளை 100 முறை ராகுல் காந்தி மீறியிருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இருப்பினும் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால்,மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று எந்த முக்கிய நடவடிக்கைளும் நடைபெறாமல் மக்களவை நேரம் வீணானது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்