தேசிய செய்திகள்

உத்தரபிரதேச சட்டசபையில் ஜிஎஸ்டி கூட்டத்தின் போது குறட்டைவிட்டு தூங்கிய எம்.எல்.ஏ.க்கள்!

உத்தரபிரதேச சட்டசபையில் ஜிஎஸ்டி கூட்டத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் குறட்டைவிட்டு தூங்கும் வீடியோவானது வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று, முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக் கொண்டார். பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது. முதல் கூட்டு கூட்டத்தில் கவர்னர் ராம்நாயக் உரையாற்றினார். சட்டசபை நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

அப்போது கவர்னர் ராம்நாயக்கின் மீது காகித பந்துகளும் வீசப்பட்டன. ஜிஎஸ்டி மசோதா ஏற்கனவே பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிவிட்டது.

இப்போது மாநிலங்களில் நிறைவேற்றப்பட உள்ளது. ஏற்கனவே மாநிலத்தில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துவிட்டார். மாநில சட்டசபையில் இன்று ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் குறட்டைவிட்டு தூங்கிஉள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. முதல் கூட்டமே குறட்டையிலா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு