தேசிய செய்திகள்

கேரள பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படமாட்டாது; கல்வித்துறை அறிவிப்பு

கேரளாவில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படமாட்டாது என கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன. எனினும், வருகிற நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில், பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படமாட்டாது என கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக, அதற்குரிய தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. கேரளாவில் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, பள்ளிகளுக்கு முன்பு அமைந்துள்ள கடைகளில் மதிய உணவு சாப்பிட அனுமதி இல்லை எனவும், ஒரு பெஞ்சில் இரண்டு பேர் மட்டுமே அமர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால், அவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...