தேசிய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டுகள்: அறிக்கை வெளியிடப்படும்; நாடு திரும்பிய மந்திரி எம்.ஜே. அக்பர்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் பெண் பத்திரிகையாளர்களின் பாலியல் குற்றச்சாட்டு பற்றி பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரியாக பதவி வகிக்கும் எம்.ஜே. அக்பர் அரசியலுக்கு வரும் முன்பாக பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு கீழ் பணிபுரிந்தபோது எம்.ஜே.அக்பர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 பெண் பத்திரிகையாளர்கள் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தனர்.

மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது அடுத்தடுத்து பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதால் இதுபற்றி விசாரணை நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் இன்று நாடு திரும்பினார். அவரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு அவர், இதுபற்றி பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

கடந்த சில நாட்களில் பத்திரிகையாளர்கள் உள்பட பல பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி வருகின்றனர்.

வருகிற சட்டசபை தேர்தல்களில் இந்த விவகாரம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக இதுபற்றி இறுதி முடிவு எடுக்க பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை