இந்த சந்திப்புக்கு பிறகு மதுபங்காரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டி.கே.சிவக்குமார், எங்கள் தந்தை பங்காரப்பாவுக்கு ஆதரவாக பணியாற்றினார். காங்கிரசில் சேரும்படி டி.கே.சிவக்குமார் தொடர்ந்து என்னிடம் கூறி வந்தார். நான் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளேன். அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நான் பாடுபடுவேன்.
எனது சகோதரி கீதா சிவராஜ்குமாரும் காங்கிரசில் சேருவார். குமாரசாமி எனது சகோதரரை போன்றவர். அவரை நான் விமர்சிக்க மாட்டேன். கடந்த 10 ஆண்டுகளில் என்னென்ன நடந்தது என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்.
இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.
அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் கூறும்போது, "காங்கிரசில் என்னை அடையாளம் கண்டு வளர்த்தவர் பங்காரப்பா. காங்கிரஸ் கடலை போன்றது. எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் இந்த விஷயத்தில் அறிவுரை வழங்கினர்" என்றார்.