குவாலியர்,
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தாமோரா என்ற கிராமத்தில் விருந்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் 5 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் குவாலியர் மாவட்டத்தில் உள்ள மொரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட 5 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக கஜ்ரா ராஜா மருத்துவக் கல்லூரி (ஜி.ஆர்.எம்.சி) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.