தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: கொரோனா விதிகளை மீறிய பா.ஜ.க. இளைஞரணி தலைவருக்கு அபராதம்

மத்திய பிரதேசத்தில் கொரோனா விதிகளை மீறி கூட்டம் சேர்த்த பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி தலைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

போபால்,

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ள மிருதுல் திவேதி கொரோனா விதிகளை மீறி கூட்டம் சேர்த்து உள்ளார். இதுபற்றிய வீடியோ ஒன்று வெளிவந்து வைரலானது.

இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவருக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. இதேபோன்று, வீடியோவில் உள்ள அனைவரும் வீட்டு தனிமையில் 7 நாட்கள் வரை இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்