போபால்,
மத்திய பிரதேசம் பிந்த் மாவட்டத்தின் அருகில் இன்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் உறவினரின் திருமணவிழாவிற்காக செல்ல 5 பேர் காரில் பயணித்திருந்தனர்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை-719இல் இன்று காலை 5 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் காரின் முன் பக்கம் அப்பலம் போல நொருங்கியது. காரில் இருந்த உமேஷ் ரத்தோர், மங்கல் ரத்தோர் மற்றும் ஆகாஷ் ரத்தோர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தீரஜ் ரத்தோர் மற்றும் மகேந்திர ரத்தோர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.