தேசிய செய்திகள்

விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி வேளாண் மந்திரி காரை மறித்த விவசாயிகள்

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில், நேற்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் சென்ற காரை விவசாயிகள் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.

தினத்தந்தி

ஷியோபூர்,

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில், நேற்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் சென்ற காரை விவசாயிகள் குழுவினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேளாண் மந்திரி, மாவட்ட மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 20 விவசாயிகள் சேர்ந்து அவரது காரை மறித்தனர்.

அவர்களிடம் காரில் இருந்தபடியே மந்திரி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் மந்திரியை நேரில் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கித் தரக் கோரினர். ஆனால் அதற்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் போலீசார் விவசாயிகளை அப்புறப்படுத்திய பின்பு மந்திரி தொடர்ந்து பயணித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது